காவலன் படத்தில் அசின் அண்ணனாக நடித்த நடிகருக்கு 4 மகள்களா. அதிலும் ஒருவர் இந்த நடிகையாம்.

0
1173
krishna
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ மலையாள நடிகர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர் அந்த வகையில் இந்த நடிகரும் ஒருவர் தான். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த பாடிகார்ட் என்ற படத்தின் ரீ -மேட் தான். விஜய் மற்றும் அசின் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சொல்லபோனால் இந்த படத்தில் தான் விஜய் தனது வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்று கூட சொல்லலாம். மேலும், காவலன் படத்தில் நடிகை அசினின் அண்ணனாக நடித்தவர் தான் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ண குமார்.

-விளம்பரம்-
Ahana Krishna complains of father Krishna Kumar for this - Mix India

1994 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கஸ்மீரம்’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்த இவர் தமிழில், விஷால் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான சதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தில்லாலங்கடி காவலன் தெய்வத்திருமகள் வெளிநாடு முகமூடி போன்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

- Advertisement -

இறுதியாக இவர் தமிழில் லாலி என்ற படத்தில் நடித்தார். மேலும், தற்போது தமிழில் மெமோரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கிருஷ்ண குமார் ஆரம்ப காலத்தில் தூர்தர்ஷன் சேனலில் வேலை பார்த்தார், அப்போது இவருக்கு சிந்து என்ற பெண்ணோடு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 4 பெண் குழந்தைகளும் பிறந்தது.

Krishna Kumar and family celebrates rare achievement on Youtube

இவரது ஒரு மகளான அஹானாவும் மலையாளத்தில் இளம் நடிகைகளில் ஒருவர் தான். நடிகை அஹானா, மலையாளத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதே போல இவரது இசை ஆல்பங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement