வடிவேலுவுடன் இருக்கும் இந்த பிரபல காமெடி நடிகர் யாருனு தெரியுதா. இவரது தற்போதைய நிலை.

0
64551
sukumar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து உள்ளார். மேலும்,இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து உள்ளார். இவர் முதன்முதலாக 1997ம் ஆண்டு ‘சக்தி’ என்ற படத்தில் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும்,நடிகர் சுகுமார் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். நடிகர் காதல் சுகுமார் அவர்கள் முதலில் சின்னத் திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தவர். அதற்கு பிறகு தான் இவர் காதல் திரைப் படத்தின் மூலம் நகைச் சுவை நடிகராக சினிமா உலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து உள்ளார். மேலும், நடிகர் சுகுமார் அவர்கள் ‘விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், திருட்டு விசிடி, என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். அதோடு 2016 ஆம் ஆண்டு “சும்மா ஆடுவோம்” என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி உள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் மூன்றாவது படம் என்று இயக்கி வருகிறார்.

இதையும் பாருங்க : அப்பாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய மகன்கள். பொறுப்பான பிள்ளைகள் தான்.

- Advertisement -

மேலும்,இந்த படத்தின் தலைப்பு “ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றவன்” ஆகும். இந்த படத்தில் அபி சரவணன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும்,கன்னிகா ரவி என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இந்த படத்தில் புதுமுக நடிகையாக அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் விஷ்ணுப்ரியன், காதல் சுகுமார், ஸ்ருதி, ஹர்ஷதா, தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வர்ஷன் இசை அமைக்கிறார். மேலும்,படத்தின் ஒளிப்பதிவு ஜீன்ஸன் லோனப்பன் அவர்கள் செய்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும், அடுத்த வருடம் இந்த படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் கூறி உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்ற படத்தில் நடிகர் சுகுமார் நடித்து வருகிறார் என்று தெரிய வருகிறது. இந்த படம் அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் எடுக்கும் படம் ஆகும். இந்த படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, காதல் சுகுமார் ,அகல்யா வெங்கடேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement