காதலன்ல ஏஆர் போட்ட பிட்டை படிக்காதவன் படத்தில் பாட்டாக போட்டுள்ள மணிசர்மா. வீடியோவ பாருங்க கண்டுபிடிச்சிடுவீங்க.

0
716
kadhalan
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை ஒரு படத்தில் வரும் ஒரு காட்சிகள் மற்றொரு படத்தில் இடம்பெறுவது சகஜமான விஷயம்தான். அதேபோலத்தான் இசையும். ஒரு படத்தில் நான் கேட்ட இசையை கொஞ்சம் தூசி தட்டி பட்டி டிங்கரிங் செய்து வேறு ஒரு படத்தில் அப்படியே சொருவி விடுவார்கள். இந்த வித்தையை பல இசையமைப்பாளர்கள் கையாண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் காதலன் படத்தில் வந்த ஒரு பிட்டை படிக்காதவன் படத்தில் ஒரு பாட்டாகவே அமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் மணிஷர்மா.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான மணிசர்மா தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான நரசிம்மா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். மேலும், 2 நந்தி அவார்ட், 3 பிலிம்பேர் அவார்ட், 2 சினிமா அவார்ட் என்று பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் மணிசர்மா.

- Advertisement -

தமிழில் நரசிம்மா படத்திற்கு பின்னர் ஷாஜகான் போக்கிரி என்று பல்வேறு படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படிக்காதவன் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளர் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது.இந்த படத்தில் இடம் பெற்ற அப்பா அம்மா விளையாட்டு என்ற பாடலை மனு ஷர்மா காதலன் படத்தில் இருந்துதான் சுட்டு இருக்கிறார் மணி சர்மா.

ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த படத்தில் காதலியான நக்மா ஆந்திராவில் இருக்கும் போது அவரை சந்திக்க பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் அவரை தேடி ஆந்திராவிற்கு செல்வார்கள். அப்போது நக்மா வீட்டுக்கு செல்லும்போது ஏ ஆர் ரகுமான் பேக்ரவுண்ட் மியூசிக் ஒன்றை கொடுத்து இருப்பார். அந்த மியூசிக்கை நீங்கள் உற்றுக் கேட்டால் அதுதான்படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற அப்பா அம்மா விளையாட்டு பாடல் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும்

-விளம்பரம்-
Advertisement