750 படங்களுக்கு மேல் நடித்த பஞ்ச தந்திரம் பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.

0
427
Kaikala Satyanarayana
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் நடிகர் கைகால சத்தியநாராயணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் கடந்த 60 ஆண்டுகளாக வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளர், இயக்குனர் என பன் முகத் தன்மைகளை கொண்ட இவர் இன்று உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார்.

-விளம்பரம்-

இவர் பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1935ஆம் ஆண்டு கிருஷ்ணா மாவட்டம், கில்டா வல்லேரு மண்டலம், கவுடவரம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள் மாற்று மகள்கள் உள்ளார். 1959ஆம் ஆண்டு 1959ஆம் ஆண்டு “செபை கூத்துரு” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு மகரிஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் என்.டி.ஆர் நடித்திருந்த யமகோலா படத்தில் யமதர்ம ராஜா வேடத்தில் நடித்தது பெருமையை பெற்றுத்தந்தது.

- Advertisement -

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ஜெயராம், யூகி சேது, தேவயானி, நாகேஷ், மணிவண்ணன், கோவை சரளா, ஐஸ்வர்யா பாஸ்கரன், கவிதா ரஞ்சினி, சங்கவி, ரம்யா கிருஷ்ண போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த சூப்பர் ஹிட் திரைப்படமான “பஞ்சரித்திரம்” படத்தில் நடிகர் ஸ்ரீமனின் மாமனாராக நடித்திருப்பார். அதில் அவர் சொல்லும் ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ என்ற வசனம் இன்றும் மக்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது.

தெலுங்கு சினிமாவில் எஸ். வி.ரங்காவிருக்கு பிறகு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று பெருமைக்குரியவர் நடிகர் நடிகர் கைகாலா சாந்தியநாராயண. 86 வயதாவுக்கும் இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்ப்பட்டது. இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திருப்பின்னர். இந்த நிலையில் இவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் காலமானார். இவரது உடல் பிலிம் நகரில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு நடிகர் கல்யாண்ராம் போன்ற பல பிரபல நடிகர்கள் மறைந்த நடிகர் கைகால சத்தியநாராயணன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement