‘டெல்லி கையில வேல்’ – கைதுனு சொல்லி Aquaman எடுத்து வச்சிருக்கீங்க. கைதி இந்தி டீசரை கண்டு கடுப்பான தமிழ் ரசிகர்கள்.

0
432
kaithi
- Advertisement -

அஜய் தேவ்கானின் போலோ படத்தின் டீசரை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். மாநகரம் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் லோகேஷ். அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

- Advertisement -

லோகேஷ் திரைப்பயணம்:

இதை அடுத்து லோகேஷ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் போலோ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள்.

கைதி படம்:

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், பொன்வண்ணன், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

போலோ பட டீசர்:

மேலும், கைதி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இந்த படத்தில் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு போலோ என்று பெயர் வைத்து இருக்கின்றனர். அஜய் தேவ்கன் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், T சீரிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து போலா திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் நரேனின் பிஜாய் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். நடிகை அமலாபால் முக்கியமான வேடத்தில் படத்தில் நடித்து வருகிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அடுத்த ஆண்டு (2023) மார்ச் 30ஆம் தேதி போலா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் போலா திரைப்படத்தின் அதிரடியான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரின் இறுதியில் அஜய் தேவ்கான் சூலத்தை எடுத்துக் கொண்டு காரில் குத்துவது போன்ற காட்சி வரும். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே அதிர்ச்சி அடைந்து, என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கைதி படத்துல எதுக்குடா சூலம்? என்று விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சிலர், லோகேஷ் மட்டும் இந்த டீசரை பார்த்தால் அவ்வளவுதான் என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே அஜய் தேவ்கான் தமிழ் ரீமேக் படங்களில் நடித்து இருக்கிறார். அந்த படங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. ஆகேவ, கைதி ஹிந்தி ரீமேக் நிலை என்னவோ? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement