காஜல் அகர்வால் எடுத்த 100 நாள் செலஞ்.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
1092
kajal
- Advertisement -

பொதுவாக பாலிவுட் பக்கம் சென்றாலே ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் ஹீரோயினிகள் என்றால் ஒல்லியான உடல் வாகு என்பதை கடுமையாக கடைபிடித்து வருகின்றனர். இந்த கலாச்சாரம் கடந்த சில காலமாகவே தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் மத்தியிலும் ஒட்டிக்கொண்டுள்ளது.

-விளம்பரம்-

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோயின்களும் தங்களது உடலை ஒல்லலியாக வைக்க படாதா பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தற்போது 100 நாட்களில் ஒல்லியாகும் சவால் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறாராம்.

- Advertisement -

இப்பொழுது காஜல் அகர்வால் தமிழில் பாரிஸ் பாரிஸ், கோமாளி மற்றும் இந்தியன் 2 படத்திலும் மேலும் தெலுங்கில் ரனரங்கம் என்ற படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். கடந்த மே 24 அன்று இவர் நடித்த சீதா படமும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காஜல் அகர்வால் தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக தான் இருக்கிறார். இந்த நிலையில் 100 நாளில் தனது உடலை மீண்டும் குறைப்பேன் என்று காஜல் பதிவிட்டதும் ரசிகர்கள் அனைவரும் இதற்கு மேல் உடலை குறைக்க போகிறீர்களா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement