காஜல் அகர்வால் இளம் நடிகருடன் டேட்டிங்,அவர் யார் தெரியுமா – விவரம் உள்ளே

0
3233

சினிமா நடிகைகள் என்றால் கிசுகிசுக்களில் சிக்குவது வாடிக்கைதான். நண்பருடன் எங்காவது வெளியில் சென்றால் கூட அது அவரது காதலர் என சொல்லிவிடுவார்கள். தற்போது அந்த கிசுகிசுவில் மாட்டியுள்ளவர் நடிகை காஜல் அகர்வால்.

KajalDN

இவர் தற்போது ஹிந்தியில் ஹிட் அடித்த குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க படங்களை தன் கையில் வைத்துள்ளார்.

இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தது. ஆனால் அவை எதுவுமே உண்மையில்லை என காஜல் அகர்வால் மறுத்துவிட்டார்.

kajalnagarwal

இந்நிலையில் தற்போது வேறு ஒருவருடன் காதலில் சிக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ஒரு இளம் நடிகர் ஒருவருடன் காஜல் பலமுறை டேட்டிங் சென்றுள்ளதாக ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து பேசிய காஜல் அகர்வால், எனக்கு தற்போது காதலில் விருப்பம் இல்லை. திருமணம் செய்யும் எண்ணமும் இல்லை. அந்த செய்திகள் எல்லாம் வதந்தி என கூறிவிட்டார்.