அட, 7ஜி ரெயின்போ காலனியில் குரூப் டான்சராக ஆடியுள்ள விஜய் அஜித் பட ஹீரோயின். யார் தெரியுதா ?

0
1812
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

காஜல் திருமணம்:

இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ‘நீல் கிச்சலு’ என்ற மகன் இருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த கருங்காப்பியம் படம் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து உம்மா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

காஜல் நடிக்கும் படங்கள்:

மேலும், அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து இருக்கிறார். சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2. பல பிரச்சனைகளுக்கு பின் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தற்போது வருகிறது. இதை அடுத்தும் சில படங்களில் காஜல் கமிட்டாகி இருக்கிறார்.
இந்த நிலையில் காஜல் அகர்வாலின் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

7ஜி பிருந்தாவன் காலனி :

தற்போது இந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்கள் எல்லாம் கடந்து தான் இந்த நிலையில் இருப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் இவர் குரூப் டான்ஸராக நடனம் ஆடி இருக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் தான் 7 ஜி ரெயின்போ காலனி.

காஜல் குரூப் டான்ஸ் வீடியோ:

இந்த படத்தை தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இதில் தான் ஒரு பாடலுக்கு காஜல் குரூப் டான்ஸ் ஆக நடனம் ஆடி இருக்கிறார். மீண்டும் 7ஜி பிருந்தாவன் காலனி படத்தை செப்டம்பர் 22ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காஜலின் இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement