இந்த நடிகர் என்னிடம் இரண்டு முறை காதலை சொன்னார் ! காஜல் அகர்வால் ஓபன் டாக் ! யார் தெரியுமா ?

0
2532
Actor Navdeep

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்தியில் ஒரு குத்து பாடல் மூலம் பாலிவுடிலும் தனது கால் பதித்தார்.

navdeep

பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள காஜல் அகர்வால் சமீபத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் பற்றியும் தம்மை காதலித்த ஹீரோக்கள் பற்றியும் வெளிப்படையாக கூறியுள்ளார்.காஜல் அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். மேலும் இவர் முதன் முதலில் அறிமுகமானது அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நவ்தீப் நடித்த அ ஆ இ ஈ என்ற படத்தில் தான்.

அந்த படத்தில் நடித்த போது நடிகர் நவ்தீப் தன்னிடம் இரண்டு முறை காதலை தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை அவரிடம் எந்த பதிலையும் நான் கூறியது இல்லை என்றும் மேலும் இப்போதைக்கு எனக்கு காதலிக்கும் எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் காஜல் தெரிவித்துள்ளார்.