சக நடிகையை மிகவும் பேரழகி என புகழ்ந்து தள்ளிய காஜல் அகர்வால் ? யாரை தெரியுமா !

0
898
kajal agarwal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தற்போது தெலுங்கில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். 31 வயதான காஜல் அகர்வால் சினிமாவை தவிர வேறு ஒரு பிஸ்னஸ் செய்து வருகிறார். ஹைதராபாத் நகரில் ஒரு மிகப்பெரிய பொட்டிக் வைத்து நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளது.

மேலும், படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிக்கும் சென்று வருகிறார். நடிகை அமலா பால் நடித்துள்ளார் ‘அதோ அந்த பறவை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், பெண்கள் தினமான நேற்று வெளியிப்பட்டது.

- Advertisement -

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார். இதனை வெளியிட்டு பேசிய காஜல் அமலா பாலை பேரழகி என வர்ணித்தார். மேலும், தனது ட்வீட்டர் பக்கத்தில் அந்த பர்ஸ்ட் லுக்கை பதிவு செய்து, டார்லிங் அமலாபால் படத்தினை பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார் காஜல்.அம்லா பால் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அத்தனையும் சமாளித்து தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இது பாரட்டுக்குரியது

Advertisement