5 ஆம் மாத Baby Bump – தங்கை மகனுடன் காஜல் நடித்த விளம்பரம். கொழுக் முழுக்னு ஆகிட்டாங்களே.

0
728
kajal
- Advertisement -

கர்ப்பமான பின்னர் தன் சகோதரியின் மகனுடன் நடித்த விளம்பர வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் 4, 5 நாட்கள் கொண்டாட்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். தற்போது காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

தொழிலதிபருடன் திருமணம் :

சமீப காலமாக காஜல் அகர்வால் பதிவிடும் புகைப்படங்களில் அவரது வயறு கொஞ்சம் பெரிதாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இருவரும் அதனை மிகவும் சூசகமாக உறுதி செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் காஜல் :

அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார். அதே போல காஜல் அகர்வாலும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை எல்லாம் பார்த்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை நெட்டிசன்கள் உறுதி செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

காஜலின் பேபி பம்ப் புகைப்படம் :

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யும் விதமாக காஜல் அகர்வால் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் காஜல். அதில் அவரது கர்ப்பம் தெளிவாக தெரியும் வகையில் போஸ் கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் காஜல் ஓரியோ விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

காஜலின் புதிய விளம்பர வீடியோ :

அதில் தன் சகோதரி நிஷா அகர்வாலின் மகனுடன் அந்த வீடியோவில் தோன்றியுள்ள காஜல் முன்பை விட கொஞ்சம் உடல் எடை கூடி இருக்கிறார். அதே போல அந்த வீடியோவில் காஜலின் Baby Bumpவும் தெளிவாக தெரிகிறது. நடிகை காஜல் அகர்வால் இறுதியாக லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் நடித்து இருந்தார். தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 படப்பிடிப்பில் எப்படி கலந்துகொள்வார் என்பது தெரியவில்லை.

Advertisement