அம்மா ஆகப் போறது அவ்ளோ ஈஸி இல்ல – 7ஆம் மாத Pregnancy புகைப்படத்தை பகிர்ந்து காஜல் அகர்வால் போட்ட பதிவு.

0
627
kajal
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். ‘கோமாளி’, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனிடையே சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

தொழிலதிபருடன் திருமணம் :

இப்படி ஒரு நிலையில் காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் காஜல் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கர்ப்பமாக இருக்கும் காஜல் :

இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். திருமணத்திற்கு பின் காஜலுக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் சில மொழி படங்களில் கமிட்டாகி நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார்.

-விளம்பரம்-

7 ஆம் மாத போட்டோ ஷூட் :

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய 7 ஆம் மாத கர்ப்ப காலத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கும் காஜல், தன் இன்ஸ்டா பக்கத்தில் தாய்மை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘தாய்மைக்கான தயாரிப்பு அழகாக இருக்கும், ஆனால் குழப்பமாக இருக்கும். ஒரு கணம் நீங்கள் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உணர்கிறீர்கள், அடுத்த கணம், நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள், உறங்கும் நேரத்தை எப்படி நிர்வகிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்.

கர்ப்பகாலத்தில் நடக்கும் மாற்றங்கள் :

இந்த நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் நம் குழந்தைகள் மற்றும் கணவரை நேசிப்பதன் மூலம், இந்த உணர்ச்சிகளின் குவிப்பு (மகிழ்ச்சி, சோகம், பதட்டம், இதய துடிப்பு) நமது தனித்துவமான கதைகளை ஒன்றிணைத்து அவற்றை நம்முடையதாக ஆக்குகிறது என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம், இதை எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார் காஜல். இன்னும் சில மாதங்களில் அம்மாவாக போகும் தருணத்தை எண்ணி காத்துகொண்டு இருக்கும் காஜலுக்கு வாழ்த்துக்கள் !!

Advertisement