கடற்கரையில் ஒய்யாரமாக அமர்ந்து ஒயின் குடித்த காஜல். வைரலாகும் புகைப்படம்.

0
26404
kajal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின்னர் 2007 ஆம் ஆண்டு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற திரைப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் நடிகை காஜல் 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த ‘பழனி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா என்ற படத்தின் மூலம் தான் நடிகை காஜல் அகர்வால் மக்களிடையே மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு இருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா தனுஷ் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டார் நடிகை காஜல். சமீப காலமாக நடிகை காஜல் அகர்வால் படம் அவ்வளவாக வெளி வரவில்லை. தமிழில் இந்த வருடம் மட்டும் இவர் ஒரே ஒரு படம் தான் நடித்து உள்ளார். அது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

- Advertisement -

தற்போது உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடித்து வருவதால் தமிழை முறையாக கற்று வரும் காஜல் அகர்வால் சில வர்ம கலைகளையும் கற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது நடிகை காஜல் அகர்வால் ஆண்டு விடுமுறையை மாலத்தீவில் பிசியாக நடித்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

View this post on Instagram

? @ncstravels @reethifaruresort

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

இந்த நிலையில் நடிகை காஜல் உயரமாக அமர்ந்து ஒயின் குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் கடற்கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை அனுபவித்துக்கொண்டு கொஞ்சம் வருந்துகிறேன் இது உண்மையான சந்தோஷம் என்று பதிவிட்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது, மேலும், ஒயின் குடிப்பதை வெளிப்படையாக பதிவிட்ட காஜலை கண்டு சற்று வியப்பிலும் இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement