லேட்டஸ்ட் நியூஸ் : காஜல் இவரை தான் திருமணம் செய்துக்க தயாராமே?

0
1598
Kajal-Aggarwal
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-
தனது பெற்றோர்களுடன் காஜல்

மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் சில விஷயங்கள் உண்மை என்றாலும் பல விஷயங்கள் வதந்திகளாகவே உள்ளன. இப்படி காஜல்அகர்வால் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் இருந்தாலும் அவர் எந்த ஒரு பதில் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் திருமணம் குறித்து தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் தன்னுடைய குடும்பத்தின் சம்மதம் மற்றும் விருப்பப்படி தான் திருமணம் செய்து கொள்வதாகவும், அவர் தற்போது தன்னுடைய சினிமா துறையில் தான் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இவர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நடித்து முடித்த பிறகு தான் திருமணம் குறித்து பேசபடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் இதெல்லாம் ரூம்மர் என்று கூறப்படுகிறது. இவர் கல்யாணம் செய்ய முடிவெடுத்து இருப்பது உண்மையா? இது காஜல் அகர்வால் அளித்த பதிலா? இதனுடைய உண்மை என்ன என்று காஜல் சொன்னால் தான் தெரியும்.

kajal-aggarwal

தற்போது காஜல் அகர்வால் அவர்கள் துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவர் நடித்து முடித்து உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டு இருக்கிறார். பின் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement