பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் "இந்தியன்". இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
https://twitter.com/MsKajalAggarwal/status/1226085412189290496
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள் அப்பா கமலின் மனைவி வேடத்தில் 80 வயது பாட்டியாக நடிக்கிறார். அதாவது இந்தியன் முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சித்தார்த் அவர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார். நடிகர் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதே போல தற்போது சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சி வேலைகளில் மும்மரமாக இருந்து வருகிறார் கமல். எனவே, தேர்தல் முடிந்த பின் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல் கலந்து கொள்ள இருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றது அப்போது காஜல் அகர்வால் சம்பந்தமான காட்சிகள் தற்போது எடுக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அப்போது காஜல் அகர்வால் அவர்கள் இந்தியன் 2 படத்தில் தன்னுடைய கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார் காஜல்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலிடம் ‘இந்தியன் 2’ படம் ஏன் நிறுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த காஜல்... “‘இந்தியன் 2’ படத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவுக்கு வந்து அவர்களால் பணிபுரிய முடியவில்லை. அதனால்தான் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.





