தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.
மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் சில விஷயங்கள் உண்மை என்றாலும் பல விஷயங்கள் வதந்திகளாகவே உள்ளன.
இந்த நிலையில் இந்த லாக்டவுன் சமயத்தில் நடிகை காஜலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்தம் முடிந்து விட்டதாகவும் லாக்டவுன் முடிந்ததும் காஜலின் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது காஜல் அகர்வால் அவர்கள் துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவர் நடித்து முடித்து உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டு இருக்கிறார். பின் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.