என் மகனுக்காக காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விமல் பட நடிகை பேட்டி.

0
2095
kajal
- Advertisement -

சமீபத்தில் திருமணம் முடித்த காஜல் அகர்வாலை விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார் விமல் பட நடிகை. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். இப்படி ஒரு நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் விமலுடன் இஷ்டம் படத்தில் நடித்த நிஷா அகர்வால் காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பேசிய அவர், சில சுயநலமான காரணங்களால் அவர் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு திருமணம் ஆன நாளில் இருந்தே நான் இதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினால் என்னுடைய மகனுக்கு துணை கிடைக்காது. அவனுக்கு இப்போதே 3 வயது ஆகிறது. அதனால் சீக்கிரம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். காஜல் அகர்வாலின் சகோதரியான நிஷா அகர்வால் தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், தனது அக்கா காஜல் அகர்வாலுக்கு முன்பாகவே கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 வயதில் ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement