தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். ‘கோமாளி’, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
காஜலின் திருமணம் :
காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார்.
கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த காஜல் :
இப்படி ஒரு நிலையில் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை காஜலுக்கு வாழ்த்துக்களை குறி வந்தனர். மேலும் தங்களது குழந்தைக்கு குடும்ப பெயரை இணைத்து நெய்ல் கிட்ச்லு என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
நடித்து வரும் படங்கள் ;
இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆக்டோபர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கருங்காப்பியன், கோஸ்ட், உம்மா உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாக இருக்கிறது. அதோடு படத்தில் நடிப்பது தவிர்த்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் தொடர்ந்து தன்னுடைய குடும்பம் மற்றும் மகனின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
மகனுக்கு 8 வயதில் காட்டும் படம் :
இந்த நிலையில் தான் காஜல் அகராவால் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பத்திரிகையாளர் காஜல் அகர்வாலிடம் உங்களுக்கு பிடித்த படத்தையோ அல்லது காட்சியையோ உங்களது மகனுக்கு காட்ட வேண்டும் என்றாலே எதனை காட்டுவீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த காஜல் “நான் என்னுடைய மகனை 8 வயது வரையில் எதையும் பார்க்க விடமாட்டேன். அவனுடைய 8ஆவது வயதில் நான் நடித்த துப்பாக்கி படத்தை காட்டுவேன் என்று கூறினார். இவர் இப்படி கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.