டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் இரண்டாவது மனைவியை நேரில் சந்தித்த காஜல்.! எதற்கு தெரியுமா.!

By Rajkumar · 25/1/2019

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார்.

மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இதையும் படியுங்க : தனது முன்னாள் மனைவி காஜல் குறித்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி !

இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் சாண்டியின் குழந்த்தையை பார்க்க நேரில் சென்றுள்ளார் காஜல்.

சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். மேலும், சாண்டி மற்றும் சில்வியா இருவருமே அவர்களது குழந்தையை பார்க்க அழைத்ததாக காஜல் குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full