தனது முன்னாள் மனைவி காஜல் குறித்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி !

0
9111
kaajal-sandy
- Advertisement -

சாண்டியும் `பிக் பாஸ்’ காஜலும் திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்டார்கள். சாண்டியிடம் `பிக் பாஸி’ல் காஜல் கலந்துகொண்டிருப்பது குறித்துக் விகடன் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

-விளம்பரம்-
kaajal-pasupathi-mounaguru
மௌன குரு படத்தில்

“என் கடந்த காலத்தில் நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். அதனால் அதை மறக்க நினைக்கிறேன். காஜல் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. அவங்களை மறந்துட்டேன். ப்ளீஸ்!” என்று பதிலைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

- Advertisement -
பழைய வண்ணாரப்பேட்டை படத்தில்

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் காஜல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும், டான்ஸ் மாஸ்டர் சான்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கோ படத்தில்

காஜல், சான்டி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சான்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.சான்டி சில்வியா என்ற பெண்ணை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சான்டியிடம் காஜல் பற்றி கேட்க அவரோ பதில் அளிக்க மறுத்துவிட்டார். முதல் மனைவி மற்றும் கடந்த கால வாழ்க்கையை மறக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன், நிறைய அழுதுவிட்டேன் இனி என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். காஜலை பற்றி தயவு செய்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று சான்டி தெரிவித்துள்ளார். சான்டி ரஜினியின் காலா படத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement