கோலாகலமாக நடந்த காஜலின் வளைகாப்பு- வைரலாகும் காஜல் புகைப்படம்:

0
550
kajal
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். ‘கோமாளி’, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனிடையே சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

காஜல் திருமணம்:

இப்படி ஒரு நிலையில் காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் காஜல் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கடைசியாக காஜல் நடித்த படம்:

இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். திருமணத்திற்கு பின் காஜலுக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் சில மொழி படங்களில் கமிட்டாகி நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சமீப காலமாக காஜல் அகர்வால் பதிவிடும் புகைப்படங்களில் அவரது வயறு கொஞ்சம் பெரிதாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு வந்தனர். பின் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இருவரும் அதனை மிகவும் சூசகமாக உறுதி செய்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருக்கும் காஜல்:

2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார். அதே போல காஜல் அகர்வாலும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை எல்லாம் பார்த்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை நெட்டிசன்கள் உறுதி செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் அவர் படங்களில் இருந்து விலகி விட்டார்.

காஜலின் வளைகாப்பு நிகழ்ச்சி:

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தற்போது காஜலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் காஜலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சோசியல் மீடியாவில் காஜலின் வளைகாப்பு புகைப்படம் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement