சாண்டிக்கு வாய் ஜாஸ்தி.! ட்வீட் செய்த காஜல்.! என்ன இவர்களே இப்படி சொல்லிட்டாங்க.!

0
4842
sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர். அதே போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின் தொடர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற காஜலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார். அதிலும் இவரது முன்னாள் கணவரான சாண்டி குறித்து யாரேனும் தவறாக பேசினால் உடனே ட்விட்டரில் பொங்கிவிடுகிறார் காஜல்.

இதையும் பாருங்க : நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.! மேடையிலேயே கத்திய கமல்.! 

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுமிதா சாண்டியை மிகவும் கேவலமாக பேசி இருந்தார். இதனால் கடுப்பான காஜல், மதுமிதாவை ‘வார்த்தையை பார்த்து பேசு, காரி துப்பர’ என்று ட்விட்டர் கோபமாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் ‘நீங்கள் சாண்டி விஷயத்தில் ஒருதலை பட்சமாக இருக்கிறீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காஜல், நான் ஒப்புக்கொள்கிறேன், சாண்டிக்கு வாய் அதிகம் தான். ஆனால், சாண்டிக்கு பதில் அங்கு யார் இருந்தாலும் காரி துப்பினது தப்பான விஷயம் தான் என்று பதிவிட்டியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement