கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. ஆரம்ப காலத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் தேர்ந்து காமெடி செய்து வந்தார். தற்போது பழனியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் சென்னை கொரட்டூரில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் அறந்தாங்கி நிஷா. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘நிஷா தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார்’ எனத் தகவல்கள் கசியத் தொடங்க ரசிகர்கள் பலரும் நிஷாவை திட்டி தீர்த்துள்ளனர்.

இதையும் படியுங்க : இது தான் மைனாவின் ஒரிஜினல் கலரா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! 

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள நிஷா, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்த பொறுப்பாளர் ஏற்கெனவெ எனக்கு அறிமுகமானவர். ஆனாலும் அவர் கூப்பிட்டபோது, நான் கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன். அவர்தான் ‘கலைஞருக்குப் புகழஞ்சலி செலுத்துதல் கூட்டம். சினிமாக்காரங்கதான் கலந்துக்கப் போறாங்க. இப்ப நீங்களும்தான் சினிமாவுல நடிக்கத் தொடங்கிட்டீங்களே, அந்த வகையில நீங்க கலந்துக்கிறதுல எந்தத் தப்புமில்ல’ன்னு சொல்லி சம்மதிக்க வச்சார்.

பா.இரஞ்சித், வெற்றிமாறன், பொன்வண்ணன் உள்ளிட்ட சினிமா கலைஞர்கள்தான் நிகழ்ச்சியில பேசினாங்க. இந்த நிகழ்வில் பேசியது மூலமாக நான் ஏதோ திமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆகிவிட்டேன் என்பது போல் பலரும் நினைச்சிக்கிட்டாங்க. அப்படியெல்லாம் இல்லை. நிறைய பேர் எனக்குப் போன் பண்ணி ‘நிஷா மேடம் நீங்க எங்க சகோதரி மாதிரி ஒரு கட்சிக்கு சார்பா நீங்க இப்படி பேசுவீங்கனு எதிர்பார்க்கல’னு சொன்னாங்க.

Advertisement

இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டு போனா பழனி அண்ணாவுக்குத்தான் போன் பண்ணி திட்டுனேன். எப்போவுமே என் மேலே நல்ல மரியாதை வெச்சுருக்கிற பழனி அண்ணா. என்னை மன்னிச்சிருனு நிஷா’னு சொன்னார்.

Advertisement

நான் எந்த மேடைக்கு போனாலும் அந்த மேடைக்கு ஏத்த மாதிரி எனக்கான பேச்சை தயார்படுத்திக்கிட்டுதான் போவேன். தலைப்புக்கு ஏத்த மாதிரி இறங்கி பேசுற ஆள்தான் நான். பழனி அண்ணா, ‘தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசு டா.. அப்புறம் காசு தரமா விட்டுடுவாங்க’னு சொன்னார். தலைப்புக்கு ஏத்த மாதிரி பேசணும்ங்கிறதுக்காகதான் அப்படி பேசினேன். மத்தப்படி நான் திமுக ஆதரவாளர் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement