கல்யாண வீடு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகை – அரை டிராயரில் கொடுத்த போஸ்.

0
1416
spoorthy
- Advertisement -

சன்டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பு தந்த மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன். ஆரம்பத்தில் இயக்குனராக இருந்த இவர் தற்போது அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.அதுவும் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமாக திரு பிக்சர்ஸ் மூலம் கல்யாண வீடு என்ற ஒரு புது சீரியலையை சன் டிவியில் ஒளிபரப்பி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் குடும்ப பெண்கள் இடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று மகத்தான வெற்றியையே நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் திடீரென்று இந்த சிரியலில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அவர், தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்து இருந்தார் . மேலும் தன் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தும் இருந்தார். அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.

அது போக சமீபத்தில் தான் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement