நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார்.
கல்யாணி பிரியதர்ஷன்:
அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் இவர் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்திற்கு பின்னர் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘மாநாடு’ படத்தில் கல்யாணி நடித்து இருந்தார்.

கல்யாணி பிரியதர்ஷன் திரைப்பயணம்:
இதை தொடர்ந்து தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் ஜீனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்சன் திருமண விடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கல்யாணி பிரியதர்ஷன் திருமணம்:
அதாவது, கல்யாணி அவர்கள் மலையாள சீரியல் நடிகர் ஸ்ரீ ராம் ராமச்சந்திரன் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். ஆனால், இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படி இருக்கும்போது கல்யாணி பிரியதர்ஷன் இவரை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்ற அதிருப்தியில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். பின் இது தொடர்பாக கல்யாணி பிரியதர்ஷன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
Looks like @kalyanipriyan is an expert at giving these mini heart-attacks 😅♥️🫶#KalyaniPriyadarshan pic.twitter.com/8qvbz1sH6e
— KalyaniQueen93✨ (@KalyaniQueen93) October 21, 2024
உண்மை தகவல்:
அதாவது, இது உண்மை திருமணம் கிடையாது. தனக்கும் ஸ்ரீராம் ராமச்சந்திரனுக்கும் திருமணம் ஆன மாதிரி விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார்கள். இது அப்போது எடுத்த புகைப்படம் தான். இதை பலருமே நம்பி விட்டார்கள். இந்த வீடியோவை பார்த்து பலருமே கல்யாணிக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு இந்த வீடியோவை ஸ்ரீராம் ராமச்சந்திரன் தான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் தான் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






