எச் ராஜா குரலை கேட்டதும் டிவிவை உடைக்கும் கமல்.! வைரலாகும் வீடியோ.!

0
793
Kamal
- Advertisement -

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நேற்று(ஏப்ரல் 11) தொடங்கியது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், ஒவ்வொரு கட்சிகளும் வாக்குகளை சேகரித்தும் வாக்காளர்களை கவரும் பல்வேறு வகையான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

அந்த வீடியோவில் கமலஹாசனே நடித்து மக்களிடம் சில கேள்விகளையும் எழுப்பினார். மேலும், அந்த வீடியோவில் கமலஹாசன் தொலைக்காட்சி பார்ப்பது போலவும் அதில் ஸ்டாலின் மோடி, ஓபிஎஸ் போன்ற பலரும் பேசுவது போலவும் இருக்கின்றது. அப்போது என் ராஜாவின் குரலை கேட்டதும் கோபம் பயம் கவலை தூக்கி எறிந்து டிவியை உடைக்கிறார். பின்னர் மக்களிடம் சில கேள்விகளை எழுப்புகிறார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement