பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த விருந்து – அதுவும் யார்,யார் போயிருக்காங்க பாருங்க

0
459
- Advertisement -

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் வைத்து இருக்கும் விருந்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்றோடு வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது,. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. நேற்று மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பிக் பாஸ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் youtuberகளுக்கு எல்லாம் ஒரே குஷி தான். அவர்களை வைத்து பேட்டி எடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடனே சில வாரங்கள் போட்டியாளர்களுடைய பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரு.ம். இதனால் ரசிகர்களுமே அதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளருக்கு கமலஹாசன் கொடுத்திருக்கும் விருந்து தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

கமல் கொடுத்த விருந்து:

அதாவது, பிக் பாஸ் 7 நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்ட்டி நடத்தப்பட்டிருக்கிறது. அதில் மொத்த போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விருந்தை கமலஹாசன் தான் வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கமல் திரைப்பயணம்:

கடைசியாக கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வசூல் சாதனையும் செய்திருந்தது. இதனை அடுத்து தற்போது கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் உருவாகி இருக்கிறது. இதனை அடுத்து கமல் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement