‘கமல் சார் எனக்கு அப்பா மாதிரி’ – கமல் கொடுத்த புதிய கார், விலையை சொன்ன ஷர்மிளா. எத்தனை லட்சம் தெரியுமா ?

0
1897
Sharmila
- Advertisement -

ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல்ஹாசன் பரிசாக கார் வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சில வாரங்களாகவே சோசியால் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது கோவை ஓட்டுனர் ஷர்மிளா பற்றி தான். இவர் கோவை தனியார் பேருந்தில் முதல் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவர் தன்னுடைய தந்தையிடம் தான் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார். மேலும், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார்.

-விளம்பரம்-
Sharmila

பின் ஷர்மிளா போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் கூட பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஷர்மிளா பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்து அவரிடம் கலகலப்பாக பேசி பாராட்டியும் இருந்தார்.

- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

பின் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை கட்டி அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். பின் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக ஷர்மிளா பேட்டியும் அளித்து இருந்தார். இதை அடுத்து பலரும் ஷர்மிளாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள்.

ஷர்மிளாவுக்கு கமல் கொடுத்த பரிசு:

ஷர்மிளா வேலையை விட்டு நின்ற விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பேட்டியில் ஷர்மிளா அவர்கள் பேருந்து ஓட்டவில்லை என்றால் நான் ஆட்டோ, கார் வாங்கி ஓட்டி பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் நடிகர் கமலஹாசன் அவர்கள் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசாக வழங்க இருப்பதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். ஆனால், கமல் காரை கொடுக்கவில்லை என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

-விளம்பரம்-

ஷர்மிளா அளித்த பேட்டி:

இதனை அடுத்து தற்போது கமலஹாசன் அவர்கள் ஷர்மிளாவுக்கு புதிய காரினுடைய சாவியை ஒப்படைத்து இருக்கிறார். இதன் பின் ஓட்டுனர் ஷர்மிளா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், மெராசோ கார் வாங்கி இருக்கிறோம். முதலில் கார் எடுத்துக்கொண்டு ஐ டி கம்பெனியில் ஓட்டத்தான் நினைத்தேன். கமல் சார் உங்களுக்கு பஸ் வேணுமா? கார் வேணுமா? என்று கேட்டார். எடுத்தவுடனே பெரிதாக போக வேண்டாம் என்பதால் தான் நான் கார் புக் செய்தேன்.

கார் குறித்து சொன்னது:

முதலில் எர்டிக்கா காரை புக் செய்தேன். ஆனால், கமல் சார் தான் மெராசோவை பரிந்துரை செய்தார். நாளை கார் டெலிவரி ஆகிவிடும். பஸ் பிரச்சனை நடந்த அன்று கமல் சாரிடம் இருந்து என அழைப்பு வந்தது. அவர் என்னிடம், எதைப் பற்றியும் யோசிக்க கூடாது. நான் இருக்கிறேன் என்ன வேண்டுமோ அதை கேளுங்கள். நீங்கள் தொழில் முனைவோராக வரவேண்டும். உன்னை நான் கை தூக்கி விடுகிறேன். நீ உன்னை போன்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொன்னார்.

கமல் கட்சியில் இணைவது குறித்து :

அவர் அளித்த காரின் விலை 16.80 லட்சம். அதற்கு நான் தகுதியுடவளா என்று தெரியாது. ஆனால், இன்னும் 3 வருஷத்தில் என் சொந்த சம்பாத்தியத்தில் புதிய கார் ஒன்றை வாங்கிகொண்டு மீண்டும் அவரை சந்திப்பேன். அதுமட்டுமில்லாமல் கமல் சாரின் மக்கள் நீதி மையத்தில் நான் இணைக்கிறேன் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வந்தது. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. கட்சி ரீதியாக எல்லாம் எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார்

Advertisement