புதிய அவதாரத்தில் சேனாதிபதி. படப்பிடிப்பில் இருந்து லீக்கான புகைப்படங்கள்.

0
6308
Indian-2
- Advertisement -

கமலஹாசன் அவர்கள் ஆறு வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தைத் தொடங்கினார். தற்போது 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் “இந்தியன் 2” படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று கொண்டுகிறது. தமிழ் சினிமா திரை உலகில் இயக்குனர் சங்கர் என்று சொன்னாலே அனைவரும் பிரம்மாண்டம் என்று தான் சொல்லுவார்கள்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு அவருடைய படங்கள் எல்லாம் பிரமாண்ட அளவில் சூப்பர் ஹிட் கொடுக்கும். மேலும்,1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் இந்தியன். இந்தியன் படம் ‘ தலைவிரித்து ஆடும் ஊழலை ஒழிக்கும் குறிக்கோளோடு’ எடுக்கப்பட்ட கதையாகும். தற்போது 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. மேலும்,இந்த “இந்தியன் 2” படம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : இரண்டாம் குழந்தைக்கு தயாரான ரேஷ்மி. சிம்பிளாக நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள் இதோ.

- Advertisement -

இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தியன் படத்தை ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவாக்கி சூர்யா மூவிஸ் வெளியிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் ஷங்கர் படம் என்றால் சொல்லவேண்டுமா! பிரம்மாண்டமான செலவில் ரசிகர்களை தெறிக்கவிடும் அளவிற்கு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ‘எந்திரன் 2.0’ படம் முடிந்த உடனேயே சங்கர் இந்தியன் 2 படத்தில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறார். மேலும், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்திற்கான பூஜைகள் முடிவடைந்தது. மேலும், இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புகள் பிரம்மாண்டமான அளவில் போடப்பட்டு வருகின்றன.

அதிலும் அந்த செட்டுகள் எல்லாம் தங்கம் போல் தகதகவென மின்னும் அளவிற்கு அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த படத்தில் எடுக்கப்படும் ஒரு காட்சிக்கு மட்டும் 2 கோடி ரூபாய் செலவழித்து உள்ளார் இயக்குனர் ஷங்கர். மேலும், இந்த தங்க மேடை இரண்டு நிமிடம் மட்டும் தான் படத்தில் காண்பிப்பார்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அடுத்த கட்டமாக தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபாலில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் காட்டப்படும் சண்டை காட்சி ஒன்றுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கமல்ஹாசன் அவர்கள் ‘இந்தியன் தாத்தா’ கெட்டப்பில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது போபாலில் நடந்த கொண்டு இருக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை இணையத்தளங்களில் எப்படியோ வெளிவந்துவிட்டது. மேலும், கமலஹாசன் அவர்கள் அந்த புகைப்படத்தில் ஒரு குதிரை மேல் பயணம் செய்து எங்கேயோ சண்டைக்கு போகிற மாதிரி இருக்கிறது என்றும், கமலஹாசன் அவர்கள் இந்தியா தாத்தா கேட்டபின் வேற லெவல்ல இருக்காரு என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு இந்தியன் 2 படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

Advertisement