இந்த படத்தை நடிகர் கமல் தேவர் மகன் 2 படத்திலும் நடிக்க இருப்பதாக இருந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 4) கேரளாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கொச்சி வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்.
அப்போது பேசிய கமல், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். இந்தியன் 2, படமே என் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம். அதன் பின்பு நடிப்புக்கு முழுக்கு. இந்தியன் 2 வின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது.
நான் நடிப்புக்கு முழுக்குப்போட்டாலும், என்னுடைய படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். மேலும் பல சமூக நலப் பணிகளையும் மேற்கொள்ளும்" என கமல்ஹாசன் தெரிவித்தார். இதனால் கமல் ரசிகர்கள் மிகவும் ஷாக்கடைந்துள்ளனர்.சினிமாReading time · 1 min





