அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகையை சந்தித்த கமல் – கூட இருக்கும் இவர் 26 ஆண்டுக்கு முன்னே கமல் படத்தில் பணியாற்றியவர்.

0
504
Kamal
- Advertisement -

சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் தான் இவரை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்தது. இறுதியாக கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார்.

- Advertisement -

அவ்வை ஷண்முகி :

அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.முதலில் கமலஹாசன் அவருக்கு இளமை வயது உடைய பெண் கெட்டப்பில் தான் மேக்கப் போட்டு விட்டார். ஆனால், கமலஹாசன் அவர்களுக்கு அதில் முழு மனதோடு விருப்பமில்லை.

திருப்தி தராத கெட்டப் :

பின்னர் தான் மைக்கல் வெஸ்ட்மோர் அவர்கள் கொஞ்சம் வயதான பெண்ணாக இருக்கும் கெட்டப்பில் மேக்கப் போட்டு விட்டார். இந்த மேக்கப் கமலஹாசனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். அதுமட்டும் இல்லாமல் இந்த மேக்-அப் போடுவதற்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், படப்பிடிப்பில் 5 மணி நேரம் கூட அந்த மேக்கப் இருக்காதாம், சீக்கிரமாகவே போய்விடுமாம். இப்படி ஒரு நிலையில் மைக்கல் வெஸ்ட்மோருடம் கமல் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

வெஸ்ட்மோரை சந்தித்த கமல் :

இந்த சந்திப்பு குறித்து மைக்கல் வெஸ்ட்மோரின் மகளும் நடிகையுமான மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்த வாரத்தின் உச்ச நிகழ்வு கமல்ஹாசனை சந்தித்தது. அவரின் நிறுவன கதர் ஆடையை அணிந்து என்னுடைய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன்” என கூறியுள்ளார்.

Advertisement