ஒரு வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட கமல்..!கலாய்த்த ரசிகர்..!பிக் பாஸ் பிரபலம் ஆதரவு..!

0
415
kamal

தமிழ் சினிமாவில் நடிகர் கமல் எந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிகரோ அந்த அளவிற்கு சொல் ஆற்றலிலும் கெட்டிக்காரர் என்பது தெரியும். ஆனால், சமீபத்தில் நல்ல(க்)கண்ணுவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது கிண்டலுக்கு உள்ளானது.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் திரு நல்லகண்ணு நேற்று (டிசம்பர் 26) தனது 93வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதே போல நடிகர் கமலும், நல்லகண்ணுவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் நல்லகண்ணு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ‘க்’ என்ற வார்த்தையை சேர்த்து நல்லக்கண்ணு என்று குறிப்பிட்டிருந்தார் என்று ரசிகர் ஒருவர்,
க் வராது ஆண்டவரே. நல்லகண்ணு என்று கேலி செய்தார்.

இந்த டீவீட்டை பார்த்த பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாரளருமான விஜயலக்ஷ்மி,
தவறாய் சேர்ந்தது ஒரு மெய் தானே. உண்மை உடம்புக்கு நல்லது தவறாய் சேர்ந்தது ஒரு மெய் தானே. உண்மை உடம்புக்கு நல்லது ரசிகரின் இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுத்தார்.அதாவது க் என்பது மெய்யெழுத்து அல்லவா அதனை தான் விஜயலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.