உங்களுக்கு வீடியோ, எங்களுக்கு குறும்படம்.! வெச்சி செய்யும் கமல்.!

0
5076
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் தொடங்கியதிலிருந்தே பல்வேறு சண்டைகளும் சர்ச்சைகளும் ஓடிக்கொண்டு இருந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

அதே போல சேரன் மற்றும் மீரா இருவரும் நடந்த பிரச்சனை தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் தன்னைதொடக்கூடாத இடத்தில் தொட்டுத் தூக்கி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று மீரா, சேரன் மீது குற்றம் சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்ஸை அடுத்து சேரன், மீரா, சரவணன், அபிராமி, கவின், சாக்க்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் சாக்க்ஷி தான் வெளியேற போகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.ஆனால், நேற்று மீரா செய்த பிரச்னையால் தற்போது அவர் தான் வெளியேற்றபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-

Advertisement