அடுத்து இரண்டு வாரத்துக்கு கமல் பிக் பாஸிற்கு வரமாட்டார்.! காரணம் இது தான்.!

0
60207
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியி வெற்றிகரமாக 54 நாட்களை கடந்து விட்டது. இதுவரை பிக் பாஸ் போட்டியாளர்கள் பாதி கிணற்றை தாண்டி விட்டனர். எனவே, இனி வரும் நாட்களில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக மாற்றப்படும். இப்படி ஒரு நிலையில் கமல் இரண்டு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Bigg Boss 3 Kamal

மற்ற மொழிகளில் ஒளிபரப்பப்படுவது போல பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை மூன்று சீசன்கள் கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை மூன்று சீசன்களாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் மேடையில் தான் கமல் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு 10 நாள் லீவ் எடுக்க போகிறராம் கமல். இதற்கு முக்கிய காரணமே கமல் நடித்து வரும் இந்தியின் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதால் தானாம். ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சென்னை எம் ஜி ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கலந்துகொள்ள இருக்கிறாராம். மேலும், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கமலின் போர்ஷன்கள் எடுக்கப்பட இருக்கிறதாம். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு இரண்டு வாரம் கமல் வராமல் கூட போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement