‘ஆரம்பிக்களாங்களா’ – வெளியான கமலின் விக்ரம் படத்தின் வெறித்தனமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

0
721
vikram
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

- Advertisement -

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ஏற்கனவே கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தின் டைட்டிலையே வைத்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் டீஸர் வெளியாகி யூடுயுபில் பல லட்சம் வியூஸ்களை கடந்து இருக்கிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கைதி படத்தை போன்று இந்த படத்தில் நாயகி இல்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement