‘கனா காணும் காலங்கள் 2 ப்ரோமோவில் வரும் இந்த டீச்சர எங்கயோ பாத்தா மாதிரி இருக்கா ? இவங்க யார் தெரியுமா ?

0
4424
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

-விளம்பரம்-

கனா காணும் காலங்கள்:

கல்லூரி காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கனா காணும் காலங்கள் சீசன் 2:

அது மட்டுமில்லாமல் அதற்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியிலும், அதிக எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர். மேலும், புத்தம் புது பொலிவுடன், புதுமுக நடிகர்களுடன் கனா காணும் காலங்கள் சீசன் 2 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்தப் ரோபோவில் வழக்கம்போல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என நம்முடைய பள்ளி நினைவுகளை நினைவூட்டும் வகையில் உள்ளது. அதில் பள்ளி ஆசிரியையாக சங்கீதா நடித்திருக்கிறார்.

வைரலாகும் ப்ரோமோ:

அந்த ஆசிரியைக்கு பின்னால் ஒரு அழகான காதலும் காட்டப்படுகிறது. மாணவர்களின் குறும்புக்கும் ஜாலியான காட்சிகளுக்கு மத்தியில் அழகான காதல் என்று ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் ஆக கனா காணும் காலங்கள் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளது. மேலும், ப்ரோமோ வந்த முதல் நாளே சங்கீதா சோஷியல் மீடியாவில் படு வைரல் ஆனார். இவ்வளவு அழகான டீச்சரா? யார் இவர்? என்று இவரைக் குறித்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

-விளம்பரம்-

விஜே சங்கீதா அறிமுகம்:

இவர் வேற யாரும் இல்லைங்க சன் மியூசிக் விஜே சங்கீதா. சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சங்கீதா. மேலும், சன் மியூசிக்கில் இருக்கும்போது இவருக்கு என்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் செந்தமிழ் பெண்ணே, பிராங்கா சொல்லடா, லேடிஸ் சாய்ஸ் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்குப்பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்ற தொடர் அழகு. இந்தத் தொடரில் பூர்ணா என்ற கதாபாத்திரத்தில் அழகான வில்லியாக சங்கீதா மிரட்டி இருந்தார். 2017ஆம் ஆண்டில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் அழகு. இந்த தொடரில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐஸ்வர்யா, காயத்ரி ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

சங்கீதா நடித்த சீரியல்கள்:

கொரோனா காரணத்தால் இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. பின் நடிகை சங்கீதா சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் அன்பே வா சீரியலில் வில்லியின் தங்கை கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஓளிபரப்பாக இருக்கும் கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர்,

Advertisement