கடற்கரையில் படு கிளாமர் உடையில் கனா காணும் காலங்கள் மோனிஷா – இப்போ எப்படி இருகாங்க பாருங்க.

0
5129
sangavi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது .பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-221-845x1024.jpg

இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் நடித்தவர்களை வைத்து ‘பட்டாளம்’ என்ற படத்தையும் எடுத்தனர். அந்த படமும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் சங்கவி என்ற பதாபத்திரத்தில் நடித்த மோனிஷாவிருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

This image has an empty alt attribute; its file name is 2-42-1024x1015.jpg

மோனிஷா – இர்பான் இருவரும் இணைந்து ஜோடி நிகழ்ச்சியில் கூட பங்குபெற்றனர். நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்திய இவர் தற்போது ஒரு பல் மருத்துவராக இருந்து வருகிறார். மேலும், இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் கடற்கரையில் படு கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement