இந்த சீரியலுக்காக ஐடி வேலையை விட்டுட்டேன் - கனா கண்டேனடி சீரியல் ஜோடி எக்ஸ்குளுசிவ்
கனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று கனா கண்டேனடி. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயினியாக ஜாய்சன் மற்றும் சைத்ரா நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு இந்த சீரியல் மூலம் தான் இவர்கள் இருவருமே தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஜாய்சன், ஐடி தொழிலில் இருந்து இப்போதுதான் சீரியலுக்கு வந்திருக்கிறேன். இதை நான் லேர்னிங்காக தான் பார்க்கிறேன். இதற்கு முன்னாடி சில youtube சேனல்களிலும், ஷார்ட் பிலிம்களிலும் நடித்திருக்கிறேன்.
என்னுடைய youtube அனுபவத்திற்கு சீரியல் பயணம் முழுவதுமாக வேற மாதிரி இருக்கிறது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். சீரியலில் நடிக்கணும் ஐடி வேலையை விட்டுட்டு ரிஸ்க் எடுத்து தான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு இந்த துறை பிடித்திருக்கிறதால் பண்ற எல்லாத்தையும் பிடித்து பண்ணுகிறேன். எனக்கு சீரியலில் பிராம்டிங் கொஞ்சம் சரியாக வரவில்லை. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் இயக்குனர் கூட பேசி அதை சரியாக பேசி விடுவேன். இந்த சீரியல் டீமில் நான் நடிக்கணும்னு என்னை செலக்ட் பண்ணது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆடிஷன் வரும்போது நான் எதுவும் பெரிசாக எதிர்பார்க்கவில்லை.
கனா கண்டேனடி சீரியல்:
இதற்கு முன்னாடி பல ஆடிஷன் அட்டென்ட் பண்ணி இருக்கிறேன். ஆனால், எதிலும் ரிப்ளை வந்ததில்லை. ஆனால், இந்த சீரியல் ஆடிஷன் பண்ண போது நான் நல்லா நடிக்கிறேன் என்று பாராட்டினார்கள். அப்போதுதான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்த சீரியலில் வனஜா மேமுக்கு எனக்கும் ஒரு நல்ல பாண்ட் இருக்கும். மேம் கூட பேசும் போது முன்னாடி எல்லாம் எப்படி சீரியல் எடுத்தாங்க, அப்ப சீரியல் துறை எப்படி இருந்தது என்று நிறைய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதெல்லாம் கேட்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. மேலும், விக்னேஷ் சாருக்கும் எனக்கும் ரொம்பவே குறைவான காம்பினேஷன் தான் இருக்கும். கிடைக்கும் நேரத்தில் அவரிடம் பேசுவேன். அவர் எல்லா விஷயங்களையும் சொல்லி கொடுத்தார். ஆனால், அவரின் கல்யாணம் எபிசோடு ரொம்பவே எதிர்பார்ப்பு மக்கள் கிட்ட இருந்தது.
ஜாய்சன் பேட்டி:
அதைப்பற்றி மக்களே நேரடியாக எங்ககிட்ட வந்து கேள்விகள் கேட்டார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு அந்த சீனை சைத்ரா லீக் பண்ணிட்டாங்க. அந்த காட்சியின் பிடிஎஸ் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விட்டார்கள் என்று பேசினார். உடனே சைத்ரா, தமிழ் சீரியலில் நடிக்கணும்னு ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டு இருந்தேன். நான் தெலுங்கில் நடித்த சீரியல் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தான் தமிழில் என்னோட ப்ரொபைல் கொடுத்திருந்தாங்க. அதற்குப் பிறகுதான் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கனா கண்டேனடி சீரியலில் கல்யாண எபிசோடில் இருந்து நல்ல பரபரப்பாக போக தொடங்கிவிட்டது.
சைத்ரா பேட்டி:
ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த கோயிலுக்கு வந்த நிறைய பேர் உத்தமன் கூட கல்யாணம் நடந்ததா? இல்லையா? தீபக்குடன் கல்யாணம் நடந்ததா? என்று ரொம்ப ஆர்வமாக கேட்டார்கள். எனக்கும் விக்னேஷ் சாருக்குமான சீன்ஸ் எப்பவுமே ரொம்ப பயங்கரமானதாக தான் இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவே அன்பானவர். நான் தெலுங்கு சீரியலில் பண்ணபோது எனக்கு schedule ரொம்ப பிசியாக இருக்காது. ஒரு வாரம் சூட்டிங் இருந்தால் ஒரு வாரம் பிரேக் கொடுப்பாங்க. தமிழில் 15 நாள் தொடர்ந்து சூட்டிங் நடக்கும். இப்ப எல்லாம் 15 நாட்களுக்கும் மேலையும் சூட்டிங் நடக்கிறது. அதை தொடர்ந்து சூட்டிங் இருப்பதால் நாம் அந்த கேரக்டராகவே மாறி விடுவோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.