காஞ்சனா படம் வெளியான போதே பாலியல் புகார், தற்போது கோவாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ள காஞ்சனா பட நடிகை.

By Rajkumar · 22/8/2021

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 3' படத்தில் நடித்த வெளிநாட்டு நடிகை மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான 'முனி' தொடர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை 1,2,3 என்று அடுத்ததுது பாகங்களை எடுத்து வந்தார் லாரன்ஸ். அந்த வகையில் காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் ஓவியா, நிக்கி தம்போலி, வேதிகா என்று 3 நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் பிளாஸ் பேக்கில் வரும் லாரன்ஸின் காதலியாக ரோஸி கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்பவர் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து பின்னர் நீக்கப்பட்டுள்ள மகேஷ் பாபுவின் மனைவி - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

34வயதான அலெக்ஸாண்ட்ரா ஜாவி, கோவாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்து உள்ளார். அந்த அறையின் உட்புறமும் தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவரின் காதலர் இவரை விட்டு சென்று விட்டததாகவும், அதனால் அலெக்ஸாண்ட்ரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்து இருக்கலாம் என்றும் கூறி இருக்கின்றனர்.

அலெக்ஸாண்ட்ரா ஜாவி, காஞ்சனா 3 திரைப்படம் வெளியான அதே ஆண்டுஅதாவது கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full