விஜய் படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து பின்னர் நீக்கப்பட்டுள்ள மகேஷ் பாபுவின் மனைவி – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.

0
8530
vijay
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு. தற்போது தெலுங்கு சினிமா துறையில் பிரின்ஸ் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரது படங்கள் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-147-1024x457.jpg

இப்படி ஒரு நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து பாதியில் விலகி இருக்கிறார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தில் நடித்த நடிகர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பது வழக்கமான ஒரு விஷயம்தான் ரஜினி கமல் தொடங்கி விஜய் அஜித் வரை தங்களுக்குள் பல்வேறு பட வாய்ப்புகளை தவறவிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அதேபோல ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரு படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி கதைகளும் இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் ஜோதிகாவிற்கு முன் மகேஷ் பாபாவின் மனைவியும் நடிகையுமான நம்ரத ஷிரோத்கர் தான் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முதலில் அவர் விஜய்யுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கும் விஜய்க்கும் இடையிலான ஸ்கிரீன் பிரசன்ஸ் சரியாக இல்லாததால் இந்த படத்தின் இயக்குனருக்கு திருப்தி ஏற்படவில்லை.

This image has an empty alt attribute; its file name is 1-148-1024x655.jpg

இதனால் இந்த படத்தில் அவரை நீக்கிவிட்டு ஜோதிகாவை செய்து இருக்கிறார் இயக்குனர். நம்ரத ஷிரோத்கர் 1993 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். பின்னர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார் அதன்பின்னர் ஹிந்தி கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement