ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி , படங்களிலும் நடித்துள்ளார்.
வீர மடகரி’ என்ற படத்தின் மூலம் 2008ல் கன்னட திரையுலகில் அறிமுகமான ராகினி, கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து நடித்துள்ளார். காவேரி பிரச்னையின் போது தமிழகர்களுக்கு தண்ணி தர கூடாது என்று வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார்.
அதே போல கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சைமா (SIIMA) திரைப்பட விழாவின் போது இவர் நடன மாடினார். அப்போது திடீரென்று இவரது உடை விலகியது. அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவவே அம்மணி படு பேமஸ் ஆகிவிட்டார்.
இறுதியாக கன்னடத்தில் ‘தி டெரெரிஸ்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இவருக்கு பட வாய்ப்புகள் கை கொடுக்கவில்லை. சமீபத்தில் இவர் தனது கவர்ச்சியான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.