கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தனா. இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் மாநிலம் மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இதுவரை இவர் 32 படங்களிலும், 48 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக இவர் கன்னட திரைப்பட நடிகர்களான டாக்டர் விஷ்ணுவர்தன், அம்பரீஷ், சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், சஷிகுமார், தேவராஜ் போன்ற பல பேருடன் நடித்து இருக்கிறார். வளர்ந்த பிறகு கீர்த்தனா அவர்கள் தன்னுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

Advertisement

கீர்த்தனா குறித்த தகவல்:

மேலும், தன்னுடைய தந்தையின் விருப்பப்படி இவர் அரசு போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று இருந்தார். அந்த வகையில் மாநிலத்தின் டிஎன்பிஎஸ்சி போல கர்நாடகாவின் கேஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 2011 ஆம் ஆண்டு அரசு அதிகாரியானார். பின்னர் யூபிஎஸ்சி தேர்வான குடிமை பணி தேர்வுகளில் கவனம் செலுத்தி வந்தார். கீர்த்தனா தொடர்ந்து அந்த தேர்வு எழுதி இருந்தார். பின் ஆறாவது முயற்சியில் இவர் 167-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகி இருக்கிறார்.

ஐஏஎஸ் அதிகாரியான கீர்த்தனா:

2020 பேட்சில் இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது பயிற்சிகள் எல்லாம் முடிந்து கீர்த்தனா கர்நாடக மாநிலத்தின் நெல் களஞ்சியமான மாண்டியா மாவட்டத்தின் உதவி ஆணையராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து கீர்த்தனா அவர்கள் கூறியிருப்பது, இதற்கு முன்பு நான் பிதார் மாவட்டத்தில் பயிற்சி பெற்றேன்.

Advertisement

கீர்த்தனா கூறி இருப்பது:

பயிற்சி முடிந்ததும் நான் நேரடியாக மாண்டியா உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். சிறப்பாக சேவை செய்ய மாண்டியா மக்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. அவர்களின் ஒத்துழைப்பை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கீர்த்தனாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement