தேசிங் – நிரஞ்சனி தம்பதியினருக்கு விலையுயர்ந்த பரிசளித்த பட தயாரிப்பாளர். வியந்து போன ரக்ஷன்.

0
3203
niranjana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான்நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மாநடித்து இருந்தார். இவர்களுடன் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பல நடிகர்கள்நடித்து இருந்தனர் . ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-56-1024x1014.jpg

மேலும், இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாகவும், ரக்ஷ்னுக்கு ஜோடியாகவும் நடிகை நிரஞ்சனி நடித்திருப்பார். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். பொதுவாகவே சினிமா உலகில் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை படங்களில் நடிகர், நடிகை, இயக்குனர் என அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் எல்லாம் அந்த வகையில் வந்தவர்கள் தான்.

இதையும் பாருங்க : அஜித்தின் பில்லா படத்தில் இப்படி ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ள நாட்டாமை பட நடிகை – இதோ அந்த காட்சி.

- Advertisement -

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியுடன் நிரஞ்சனிக்கு திருமணம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், புதுமணத் தம்பதிக்கு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஒரு காரை திருமண பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தேசிங்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிற இதை பார்த்த ரக்ஷன், ஓ மை காட் வாழ்த்துக்கள் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement