கர்ணன் படத்தில் அக்காவாக நடித்த இவர் இப்படி ஒரு சர்ச்சையான குறும்படத்தில் நடித்தவர் தானா.
'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
https://www.youtube.com/watch?v=lr6cc9H6hL8
இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகையும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படத்தில் இவரை பார்த்ததும் 'இவர எங்கியோ பாத்த மாதிரி இருக்கே' என்று பலரும் எண்ணம் எழுந்து இருக்கும்.
இதையும் பாருங்க : ஜி பி முத்துவின் லெட்டர் காமெடிகள் - பாராட்டி ரோபோ ஷங்கர் போட்ட பதிவை பாருங்க.
இவர் வேறு யாரும் இல்லை தமிழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'லட்சுமி' குறும்படத்தில் நடித்தவர் தான். தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இந்த குறும்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனால், அணைத்து எதிர்ப்பையும் மீறி இந்த குறும்படம் மிகவும் வைரலானது.
இந்த குறும்படத்தை மிகவும் புரட்சிகரமான படம் என்று கூறினாலும், ஒரு சிலரோ பெண்கள் சமுதாயத்தை இழிவு படுத்துவது போல இந்த குறும்படம் இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். அதேபோல இந்த குறும்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியாரின் பாடலுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் நடித்த லட்சுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தன.