ஜி பி முத்துவின் லெட்டர் காமெடிகள் – பாராட்டி ரோபோ ஷங்கர் போட்ட பதிவை பாருங்க.

0
6583
gp
- Advertisement -

காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார். ரோபோ ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர் மேடை காமெடியனாக அறிமுகமானர் அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். தற்போது ரஜினி, விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை பாராட்டி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

இதையும் பாருங்க : ‘போடு ஓ** வா வா’ – நேற்றய போட்டியில் ஸ்டம்பிற்கு பின் லோக்கல் சென்னை பாஷையில் பேசிய தினேஷ் கார்த்திக். இதோ வீடியோ.

- Advertisement -

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் இவரை பாராட்டி ரோபோ சங்கர் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், ஜி பி முத்து பற்றிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சியான புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். தபால் சேவையை மீடுடெடுத்த மீட்பாளர் ஜி பி முத்து. ‘என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement