13 ஆண்டுகளுக்கு முன்னரே படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ள மாரி செல்வராஜ். வீடியோ இதோ.

By Rajkumar · 14/4/2021

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : மத்தவங்கள பாராட்றதுல கொறஞ்சிற மாடீங்க - நயன்தாராவின் வீடியோவால் கடுப்பான திரிஷா ரசிகர்கள்.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=ZnCfk3ocZR4&t=20s

இயக்குனர் மாறி செல்வராஜ் 2006 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் வந்தார். அதன் பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் கூட ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார் மாரி செல்வராஜ். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பிறவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full