மத்தவங்கள பாராட்றதுல கொறஞ்சிற மாடீங்க – நயன்தாராவின் வீடியோவால் கடுப்பான திரிஷா ரசிகர்கள்.

0
1795
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.

-விளம்பரம்-

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இவரு போய் அந்நியனா ? ஷங்கரின் பாலிவுட் ரீ-மேக்கால் கடுப்பான விக்ரம் ரசிகர்கள்.

- Advertisement -

நயன்தாரா, அஜித்தை போல பொது பேட்டிகள் கொடுப்பது, படத்தின் விழாக்களில் கலந்து கொள்ளவது கிடையாது. ஆனால், தனக்கு கொடுக்கும் விருதுகளை மட்டும் நேரில் சென்று வாங்கிக்கொள்வார். இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா, கடந்த 2015 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Nayanthara watches Trisha's 96 with Vignesh Shivan and friends. See pics -  Movies News

அந்த பேட்டியில் நயன்தாராவிடம், கோலிவுட்டில் இருக்கும் தற்போதய நடிகைகளில் யார் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நயன்தாரா, யாரும் கிடையாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், அதே கேள்வியை 2016 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற திரிஷாவிடம் கேட்கப்பட்ட போது, எனக்கு நயன்தாரா, அனுஷ்கா, சமந்தா ஆகியோரின் படங்கள் மிகவும் பிடிக்கும், நயந்தாரா மிகவும் கடுமையாக உழைப்பது பிடிக்கும் என்று பதில் கூறியுள்ளார். இந்த வீடியோவை திரிஷா கிரிஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மற்றவர்களை பாராட்டுவதால் ஒன்றும் குறைந்து விட மாடீர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement