'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.
இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகையும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.மேலும், இந்த படத்தில் கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் வந்த நட்டியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=lFVMZF1TgA4
அவ்வளவு ஏன் இந்த படத்தில் இவரது கொடூரமான நடிப்பை பார்த்து பலரும் இவரை திட்டி தீர்த்ததால் அது வெறும் நடிப்பு தான் என்னை திட்டாதீங்க எப்போவ் என்று ட்வீட் போட்டு இருந்தார் நட்டி. இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தில் தனுஷ் அக்காவாக நடித்த லட்சுமியும் இவரும் படு ரொமான்டிக்காக நடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2017 ஆம் ஆண்டு நிவின் பவுலி நடிப்பில் வெளியான ரிச்சி படத்தில் தான் நட்டியும் லட்சுமியும் ஒன்றாக நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





