இது தான் கர்ணன் படத்திற்கு முதலில் வைத்திருந்த பெயர் - படத்தின் முக்கிய பிரபலம் சொன்ன தகவல்.

By Rajkumar · 16/4/2021

'பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்' இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளிக்கு பின்னரும் தொடரும் பந்தம் - தாமுவின் மகளோடு குக்கு வித் கோமாளி பிரபலம் வெளியிட்ட புகைப்படம்.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்திற்கு முதன் முதலில் என்ன பெயர் வைக்கப்பட்டது என்பதை இந்த படத்தின் கலை இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில்கூறி உள்ளார். முதன்முதலில் கர்ணன் படத்திற்கு 'பாண்டிய ராஜாக்கள்' என்று தான் பெயர் வைத்தார்களாம். கர்ணன் தலைப்புக்கே பல பஞ்சாயத்துகள் வந்த நிலையில் பாண்டிய ராஜாக்கள் என்று தலைப்பு வைத்திருந்தால் கண்டிப்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வந்திருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

behindtalkies AMP · Quick view
View full