குக்கு வித் கோமாளிக்கு பின்னரும் தொடரும் பந்தம் – தாமுவின் மகளோடு குக்கு வித் கோமாளி பிரபலம் வெளியிட்ட புகைப்படம்.

0
38100
damu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிவந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற இறுதி போட்டியில் அணைத்து போட்டியாளர்களும் அணைத்து கோமாளிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக். காரணம் இது தானாம்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அணைத்து போட்டியாளர்களும் கண்ணீர் விட்டனர். அதிலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த தாமு, இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததை எண்ணி கண்ணீர் மல்க அழுதார். மேலும், இந்த செட்டில் வந்தால் தான் நான் சிரிப்பேன் என்று மிகவும் உருக்கத்துடன் தெரிவித்து இருந்தார் தாமு. தாமு அழுததை பார்த்து செட்டில் இருந்த அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இப்படி ஒரு நிலையில் தாமு வீட்டிற்கு சென்றுள்ளார் சிவாங்கி அப்போது தாமுவின் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாமுவிற்கு அக்ஷ்யா என்ற மகள் இருக்கிறார். சமீபத்தில் தாமு தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்போது தான் தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியவந்தது.

-விளம்பரம்-
Advertisement